'தை ஹுவா குவான் மோரல் சேரிட்டிஸ்' (டிஹெகேஎம்சி) நன்கொடை அமைப்பு 1,200 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களுக்கான பற்றுச்சீட்டுகளை வழங்கவுள்ளது. தனது 10வது ஆண்டு நிறைவையொட்டி இந்த அமைப்பு 122,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் திரட்டியது.
'ரேஸ் டு ரெய்ஸ்' எனும் இரண்டு மாதங்களுக்கு நடத்தப்பட்ட இயக்கத்தின்கீழ் மூலம் நிதி திரட்டப்பட்டது. தனிநபர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோரிடமிருந்து 122,900 வெள்ளி திரண்டது. இந்தத் தொகை, அமைப்பின் இலக்கை மிஞ்சியது. மெக்பர்சனில் தை ஹுவா குவான் குடும்ப சேவை நிலையத்தில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் சிலருக்குப் பற்றுச்சீட்டுகளை வழங்கினார்.

