924 உள்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு விருது

924 உள்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு விருது

1 mins read
66fe41a8-0b60-4ac3-b09b-be4b06bcd15a
-

உள்­து­றைக் குழு­வின் 924 அதி­கா­ரி­க­ளுக்கு உள்­துறை அமைச்சு ேதசிய தின விரு­து­களை வழங்கி கௌர­வித்­துள்­ளது.

ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் இந்­நி­கழ்ச்சி இந்த ஆண்­டும் மெய்­நி­க­ராக நடத்­தப்­பட்­டது. அதி­காரி­களின் பங்­க­ளிப்­பிற்­கும் சேவைக்­கும் அவர்­க­ளுக்கு விருது வழங்கி கௌர­விப்­பது இதன் நோக்­கம்.

சிங்­கப்­பூ­ரைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தில் உள்­து­றைக் குழு எதிர்­நோக்­கும் சவால்­க­ளைப் பற்றி நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட உள்துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் பேசி­னார்.

"நமது அமைப்­பு­க­ளின் நம்­பகத் தன்­மை­யைக் கேள்விக்குறியாக ஆக்கும் முயற்­சி­களை ஒரு­சி­லர் எடுப்­பது குறித்­தும் அதை நாம் எவ்­வாறு கையாள்­கி­றோம் என்­பது பற்­றி­யும் முன்பு நான் பேசி­யி­ருக்­கி­றேன்," என்று திரு சண்­மு­கம் கூறி­னார்.

"இது­வரை நாம் அதை வெற்றி ­க­ர­மா­கக் கையாண்­டுள்ளோம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.