உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: சிங்கப்பூர் கண்டனம்

உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: சிங்கப்பூர் கண்டனம்

1 mins read
0b7bc2e9-f779-40e0-b540-f80d78ac5472
படம்: எஃபி -

உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதன் கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளது.

"உக்ரேனுக்கு எதிராகச் சிறப்பு ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு கவலைக்குரியது. எவ்வித தூண்டுதலும் இல்லாமல் நடத்தப்படும் தாக்குதல்களை சிங்கப்பூர் எதிர்க்கிறது.

"உக்ரேனின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்." என்று அமைச்சு கூறியது