தம்பனீஸ் நார்த் வட்டாரத்தில் கட்டுமானத் தளத்தில் ஒரு பளுதூக்கி கவிழ்ந்ததில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
அவர் பளுதூக்கியைப் பின்பக்கமாகச் செலுத்திக்கொண்டிருந்தபோது, அது ஒரு பக்கம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
அந்தத் தாக்கத்தில் அவர் வாகனத்திலிருந்து தூக்கியேறியப்பட்டதாக அமைச்சு சொன்னது.
மாண்டவர் சீனாவைச் சேர்ந்த 49 வயது ஆடவர் என தெரிவிக்கப்பட்டது.
தம்பனீஸ் ஸ்டிரிட் 64ல் உள்ள பிடிஓ கட்டுமானப் பணியில் அவர் ஈடுப்பட்டிருந்தார்.
கட்டுமானத் தளத்தில் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் காவல் துறையும் விசாரணை நடத்திவருகின்றன.

