சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை வியாழக்கிழமை (பிப்ரவரி 24) நிலவரப்படி சற்று குறைந்து 18,593ஆக இருந்தது.
ஒப்புநோக்க புதன்கிழமை நிலவரப்படி, 20,312 பேருக்குத் தொற்று உறுதியானது.
நேற்றைய நிவவரப்டி 1,615 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கு முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 1,587.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 221 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 44 பேர் உள்ளனர்.
கொவிட்-19க்கு மேலும் பன்னிரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 159 பேருக்கு தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்று விகிதம் ஞாயிற்றுகிழமை 1.37ஆக இருந்தது. சனிக்கிழமை அது 1.49ஆக இருந்தது


