சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த தீயணைப்பு நிலையம் பொங்கோல் வட்டாரத்தில் இன்று (பிப்ரவரி 25) திறக்கப்பட்டது.
தீயணைப்பு நிலையங்களில் பயன்படுத்தக்கூடிய தொழில்நட்ப அம்சங்களைச் சோதிக்கும் தளமாக இந்நிலையம் செயல்படும்.
பொங்கோல் அக்கம்பக்கப் போலிஸ் நிலையமும் தீயணைப்பு நிலையமும் ஒரே வளாகத்தில் அமைந்திருப்பதால், உள்துறைக் குழுவின் பிரிவுகள் ஒன்றிணைந்து திறன்பட செயல்பட முடியும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், மூத்த அமைச்சருமான திரு தியோ சீ ஹியன் திறப்பு நிகழ்ச்சியில் கூறினார்.
மெய்நிகர் தொழில்நுட்பம், இருவழித்தொடர்பு மின்னிலக்கத் திரைகள், நிஜ நிலவர தொழில்நுட்பம், அறிவார்ந்த வகுப்பறைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இங்குப் பயன்படுத்தப்படுகின்றன.

