எஸ்பிஎச் மீடியா குழுமத்திற்கு ஆறு புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் முதல் தேதியன்று அவர்கள் பதவியேற்பர்.
புதிய இயக்குநர்கள் பலதரப்பட்ட அனுபவங்களையும், சிந்தனைகளையும் கொண்டுள்ளவர்கள் என எஸ்பிஎச் மீடியா குழுமத்தின் தலைவரான திரு கோ பூன் வான் கூறினார்.
தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ் உள்ளிட்ட செய்தித்தாள்களை ஸ்பிச் மீடியா அச்சிடுகிறது.
புதிய இயக்குநர்கள்:
- பஹாரேன் ஷாரி
- லீ யி ஷியான்
- பிலீப் லீ
- லிம் மே
- மேக்ஸ் லோ
- இலேன் யூ


