தாம் ஆசிரியராகப் பணிபுரிந்த உயர்நிலை பள்ளியில், சக ஆசிரியர்களும் மாணவர்களும் கழிவறையைப் பயன்படுத்தும்போது காணொளி எடுத்த ஆடவர் மீது இன்று (பிப்ரவரி 25) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது.
ஆபாச படம் எடுத்தது, பொது இடத்தில் தொந்தரவு கொடுத்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆண்கள் கழிவறையைப் பயன்படுத்தும்போது 128க்கும் மேற்பட்ட காணொளிகளை அந்த 49 வயதான நபர் எடுத்ததாகக் கூறப்பட்டது.
அந்தக் காணொளிகளில் மற்ற ஆடவர்களின் முகங்களும், பிறப்புறுப்புகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
2017க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு கூட்டுரிமை வீட்டில் அமைந்துள்ள சங்கக் கட்டிடத்தின் குளியலறையில் ஒரு ஆடவரைக் காணொளி எடுக்க முயன்றபோது, கையும் களவுமாக சிக்கினார்.
குளித்துக்கொண்டிருந்தவர் காவல் துறை அதிகாரி; அதனால் சந்தேக நபரைப் பின்தொடர்ந்து சென்று அவருடைய தொலைபேசியைப் பார்க்குமாறு கேட்டுள்ளார்.
தொலைபேசியில் காவல் துறை அதிகாரி குளிப்பதோடு, மற்ற ஆண்கள் நிர்வாணமாக இருக்கும் காணொளிகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இதற்கிடைய, ஏப்ரல் 2018ஆம் ஆண்டில் ஆடவர் ஆசிரியர் பணியிலிருந்து விலகியதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.

