$4.3 மி. பறிபோன மோசடிகளின் தொடர்பில் 244 பேர் மீது விசாரணை

$4.3 மி. பறிபோன மோசடிகளின் தொடர்பில் 244 பேர் மீது விசாரணை

1 mins read
4925108c-8740-4094-8f17-4406782b3977
மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 244 பேர் மீது சிங்கப்பூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 244 பேர் மீது சிங்கப்பூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இவர்கள் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் 4.3 மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழந்துள்ளனர்.

பிப்ரவரி 11ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை சிங்கப்பூர் முழுவதும் நடத்திய சோதனையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

சந்தேக நபர்கள் 15லிருந்து 77 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் 167 ஆண்களும் 77 பெண்களும் அடங்குவர்.

மோசடிகளில் ஈடுபட்டதுடன் சட்டவிரோதமாகப் பணத்தை கைமாற்ற பயன்பட்டவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

510க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இணையத்தில் காதல் மோசடிகள், மின்வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள் அதிகாரிகளைப் போல் நடித்து ஏமாற்றும் மோசடிகள் உள்ளிட்டவவை அவற்றில் அடங்கும்.