மகாசிவராத்திரியை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலை ஒட்டிய சாலை மூடல்

மகாசிவராத்திரியை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலை ஒட்டிய சாலை மூடல்

1 mins read
7cedd69c-9d04-45b7-af80-72af7f2880af
மகாசிவராத்திரி திருவிழவை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலை ஒட்டிய கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2 சாலை, மார்ச் 1 மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.  -

மகாசிவராத்திரி திருவிழவை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலை ஒட்டிய கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2 சாலை, மார்ச் 1 மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.

காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) அன்று வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டது.

கேலாங் ஈஸ்ட் சென்ட்ரலுக்கும் கேலாங் ஈஸ்ட் அவென்யூ 3க்கும் இடைப்பட்ட கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2 சாலை, மார்ச் 1ஆம் தேதி மாலை 5 மணி முதல், மார்ச் 2ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும்,

காவல்துறை வாகனங்கள், அவசரச் சேவை வாகனங்களைத் தவிர்த்த மற்ற வாகனங்கள் அங்குச் செல்ல முடியாது என்று அறிக்கை தெரிவித்தது.

வாகனமோட்டிகளுக்கு உதவ, துணைப் போலிஸ் படை அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் சட்டவிரோமாக நிறுத்தப்படும் அல்லது பாதையை மறைக்கும் கார்கள் இழுத்துச் செல்லப்படும் என்று காவல் துறையினர் கூறினர்.