வனவிலங்கு மீட்பு, சிகிச்சைக்காக புதிய நிலையம்

பற­வை­கள், பாம்­பு­கள், புனு­குப் பூனை­கள் உள்­பட காய­ம­டைந்த வன­வி­லங்­கு­களை மீட்டு அவற்­றுக்­குச் சிகிச்சை அளிக்­கும் புதிய நிலை­யத்தை தேசிய பூங்­காக் கழ­கம் லிம் சூ காங் வட்­டா­ரத்­தில் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்து வைத்­தது.

வன­வி­லங்கு மறு­வாழ்­வுக்­கென இயங்­கும் இந்த 1,250 சதுர மீட்­டர் நிலை­யத்­தில் பல்­வேறு வச­தி­கள் உள்­ளன. அறுவை சிகிச்­சைக்­கான அறை­கள், அடை காக்­கும் கருவி, பிரா­ண­வா­யுக் கூண்டு, ஊடு­க­திர் இயந்­தி­ரங்­கள் போன்­ற­வற்­று­டன் குண­ம­டைந்­து­வ­ரும் விலங்­கி­னங்­களுக்­கான உள்­புற, வெளிப்­புற வேலி அடைப்­பு­களும் இந்த நிலை­யத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது வன­வி­லங்கு மீட்பு மற்­றும் சிகிச்சை தொடர்­பில் பங்­கா­ளி­க­ளாக விளங்­கும் 'ஏக்­கர்ஸ்', மண்­டாய் வன­வி­லங்­குக் குழு­மம் ஆகி­ய­வற்­று­டன் இனி இந்­தப் புதிய நிலை­ய­மும் செயல்­படும் என்று கழ­கம் நேற்று அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

புதிய நிலை­யத்தை நேற்று தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் பார்­வை­யிட்­டார். சிங்­கப்­பூ­ரில் வன­வி­லங்கு மறு­வாழ்­வுக்­கும் பரா­ம­ரிப்­புக்­கும் புதிய நிலை­யம் துணை­பு­ரி­யும் என்­றும் பாது­காப்பு முயற்­சி­க­ளுக்­குக் கூடு­தல் உத­வி­யாக அமை­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்­டில் மட்­டும் சுமார் 2,000 வன­வி­லங்­கு­க­ளைக் கழ­கம் மீட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. மீட்­கப்­பட்ட விலங்­கி­னங்­களில் கைவி­டப்­பட்ட அல்­லது காய­ம­டைந்த விலங்கு­கள் அடங்­கும் என்று கூறப்­பட்­டது.

சாலை விபத்­து­களில் சிக்­கு­தல், கட்­ட­டங்­களில் மோது­தல், நகர்ப்­புற இடங்­க­ளுக்­குள் தவ­று­த­லாக வரு­தல் போன்ற கார­ணங்­க­ளால் விலங்­கு­க­ளுக்கு இந்­நிலை நேர்ந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

மீட்­கப்­பட்ட விலங்­கி­னங்­களில் கிட்­டத்­தட்ட 130 விலங்­கு­க­ளுக்­குக் கூடு­தல் மதிப்­பீ­டும் சிகிச்­சை­யும் செய்ய நேர்ந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

லிம் சூ காங் வட்­டா­ரத்­தில் உள்ள விலங்கு, செடி சுகா­தார நிலை­யத்­தின் வளா­கத்­தில்­தான் புதிய நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. மறு­வாழ்வு கால­கட்­டத்­தின்­போது விலங்­கு­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்டு, உணவு அளிக்­கப்­பட்டு, பரா­ம­ரிப்­பும் வழங்­கப்­படும். ஆனால், மனி­தத் தொடர்பு அவற்­றுக்­குப் பழ­கி­வி­டா­த­படி இந்­தப் பரா­ம­ரிப்பு அளிக்­கப்­படும்.

ஆமை­க­ளுக்­குக் குளங்­கள், தவ­ளை­க­ளுக்­குத் தொட்­டி­கள், குரங்­கு­கள் ஏறி இறங்­கு­வ­தற்­குக் கட்­ட­மைப்­பு­கள் எனப் பல­த­ரப்­பட்ட இட­வ­ச­தி­கள் புதிய நிலை­யத்­தில் செய்­துத் தரப்­பட்­டுள்­ளன.

வன­வி­லங்­கு­க­ளைச் செல்­லப்­பிரா­ணி­க­ளாக வைத்­தி­ருக்க வேண்­டாம் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!