அதிபர் ஹலிமா யாக்கோப் விடுத்த அழைப்பை ஏற்று வியட்னாமிய அதிபர் இங்யுவேன் சுவான் புக் சிங்கப்பூருக்கு வருகை அளித்துள்ளார்.
அவரைச் சந்தித்த பிரதமர் லீ சியன் லூங், இரு நாடுகளின் வலுவான உறவைத் தாங்கள் மறுஉறுதிப்படுத்திக்கொண்டதாக நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
அத்துடன் இரு நாடுகளின் பொருளியலை வலுப்படுத்தவும் கொள்ளைநோய்க்குப் பிந்திய மீட்சியை மேற்கொள்ளவும் தங்கள் முன்னிலையில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்தார்.

