தடுப்பூசித் தகுதிநிலையை வேறொருவர் பயன்படுத்த அனுமதித்தவருக்குச் சிறை

தடுப்பூசித் தகுதிநிலையை வேறொருவர் பயன்படுத்த அனுமதித்தவருக்குச் சிறை

1 mins read
f82af833-346e-4381-be77-a76c8481ea41
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளாத ஒரு­வர், தனது 'டிரேஸ்­டு­கெ­தர்' செயலி மற்­றும் தடுப்­பூ­சித் தகு­தி­நி­லை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனு­ம­தித்­த­தற்­காக மலே­சி­ய­ரான 37 வயது கிரண் சிங் ரக்­பிர் சிங் (படம்) என்­ப­வ­ருக்கு நேற்று ஐந்து நாள்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

செந்­தோ­சா­வில் உள்ள ஒரு மதுக்­கூடத்­திற்­குக் கடந்த ஆண்டு செப்­டம்­பர் 9ஆம் தேதி­யன்று தனது காத­லி­யு­ட­னும் பணி ஓய்­வு­பெற்ற உத­ய­கு­மார் நல்­ல­தம்பி என்­ப­வ­ரு­ட­னும் சிங் சென்­ற­போது, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத உத­ய­கு­மாரை மதுக்­கூட ஊழி­யர் அனு­ம­திக்­க­வில்லை.

இத­னால், அரு­கில் உள்ள வேறு மதுக்­கூ­டத்­திற்­குச் செல்­லத் தனது தடுப்­பூ­சித் தகு­தி­நி­லை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள சிங் உத­வி­யதை முன்­ன­தாக ஒப்­புக்­கொண்­டி­ருந்­தார்.