சிங்கப்பூரில் எண்ணெய் விலை ஏற்றம்

சிங்கப்பூரில் எண்ணெய் விலை ஏற்றம்

1 mins read
4a79025a-c9b2-4ee3-977c-315b4cb56412
-

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதன் எதிரொலியாக, சிங்கப்பூரில் எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டன. ஐந்தில் நான்கு எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் எண்ணெய் விலையை லிட்டருக்கு 6 முதல் 21 காசு உயர்த்திவிட்டன. ஏழு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தற்போதைய நிலை தொட்டுள்ளது. நேற்றிரவு நிலவரப்படி, 'எஸ்பிசி' நிறுவனம் அதன் எண்ணெய் விலையை உயர்த்தவில்லை. இருப்பினும், மற்ற நிறுவனங்களைப் போல் அதுவும் விரைவில் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரேன் நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்தால், எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். மோட்டார் கட்டணத்தைத் தவிர பயன்பாடுகள், சுற்றுப்பயணம், தளவாடம் தொடர்பான செலவுகளும் பாதிப்படையலாம்.