சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த தீயணைப்பு நிலையம்

சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த தீயணைப்பு நிலையம்

1 mins read
417e6cec-ba16-4b01-82ac-b55ee60b3d05
புதிய பொங்கோல் காவல்துறை நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்ட மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் (வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்).படம்: சாவ்பாவ் -

சிங்­கப்­பூ­ரின் முதல் அறி­வார்ந்த தீய­ணைப்பு நிலை­யம் பொங்­கோலில் அதி­கா­ர­பூர்­வை­மா­கத் திறக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று திறக்­கப்­பட்ட இந்நிலையத்தில் அறி­வார்ந்த வகுப்­ப­றை­கள், தானி­யக்க மருத்­துவ வசதி போன்ற அம்­சங்­கள் அமைந்­துள்­ளன.

தீய­ணைப்பு நிலை­யங்­களில் பொது­வாக காணப்­படும் தீய­ணைப்பு வாக­னங்­கள், மருத்­துவ உதவி வாக­னங்­கள் உள்­ளிட்­ட­வை­யும் இந்­நி­லை­யத்­தில் இருக்­கின்­றன.

புதிய அக்­கம்­பக்­கத்து காவல்­துறை நிலை­யத்­து­டன் இணைந்து இந்த தீய­ணைப்பு நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதர நிலை­யங்­களி­லும் செயல்­ப­டுத்­தும் நோக்­கு­டன் இங்­குள்ள பல புதிய அம்­சங்­களும் தொழில்­நுட்ப முறை­களும் எவ்­வளவு ஆக்­க­பூர்­வ­மாக இருக்­கின்­றன என்­பது பயன்­ப­டுத்­திப் பார்க்கப்­படும்.

உள்­து­றைக் குழுவை ஒன்­றி­ணைக்கும் இலக்கு உள்­ளது என்றும் அதைக் கருத்­தில்­கொண்டே பொங்­கோல் அக்­கம்­பக்­கத்து காவல்­துறை நிலை­ய­மும் பொங்­கோல் தீயணைப்பு நிலை­ய­மும் ஒரே இடத்­தில் அமைக்­கப்­பட்டுள்ளது என்றும் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் கூறி­னார். மேலும், ஆக்­க­பூர்­வ­மாக இயங்கு­வ­தற்­கும் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வ­தற்­கும் தோதாக இரு குழு­வி­ன­ரும் தங்­க­ளி­டையே இருக்­கும் வளங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள இந்த ஏற்­பாடு வகை­செய்­யும் என்­றார் பாது­காப்­புக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ.

"நிலைமை சவா­லா­கி­ வ­ரு­வ­தால் வளங்­களை முடிந்­த­வரை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனை­வரை­யும் உள்­ள­டக்­கும் ஒன்­று­பட்ட அணுகு­மு­றை­யைப் பின்­பற்றி உள்­துறை அமைச்­சின் குழுக்­கள் இணைந்து செயல்­ப­ட­வேண்­டும்," என்று அறி­வார்ந்த தீய­ணைப்பு நிலை­யத்­தின் திறப்பு விழா­வில் கலந்­து­கொண்ட அமைச்­சர் சொன்­னார்.

சென்ற ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து இந்­நி­லை­யம் இயங்­கி­வரு­கிறது. 11 அவசர சேவை வாகனங்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்கள், நான்கு மருத்துவ உதவி வாகனங்கள் உள்ளிட்டவை இந்நிலையத்தில் இருக்கின்றன.