மோசடியில் ஈடுபட்டதாக 244 பேர் மீது சந்தேகம்

மோசடியில் ஈடுபட்டதாக 244 பேர் மீது சந்தேகம்

2 mins read
e0d0b70d-0ac7-4f1d-bd16-154816475dab
-

மோச­டிச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கி­க்­கப்­படும் 244 பேர் குறித்து சிங்­கப்­பூர் காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது. இவர்­கள் ஈடு­பட்­ட­தா­கச் சொல்­லப்­படும் மோச­டிச் சம்­ப­வங்­களில் சிக்கி­ய­வர்­கள் மொத்­தம் 4.3 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் மேலான தொகையை இழந்­துள்­ள­னர்.

இம்­மா­தம் 11ஆம் தேதி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் வரை சிங்­கப்­பூர் முழு­வ­தும் நடத்­திய சோத­னை­யில் சந்­தேக நபர்­களை அடை­யா­ளம் கண்­ட­தா­கக் காவல்­துறை வெளி­யிட்ட அறிக்­கை­ குறிப்பிட்டது.

சந்­தேக நபர்­கள் 15லிருந்து 77 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள். இவர்­களில் 167 ஆண்­களும் 77 பெண்­களும் அடங்­கு­வர்.

மோச­டி­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் பணத்தை சட்­ட­வி­ரோ­த­மா­கக் கடத்­தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தா­க­வும் சந்­தே­கிக்­கப்­படும் இவர்கள் தற்­போது காவல்­துறை விசா­ர­ணைக்கு உதவி வரு­கின்­ற­னர்.

510க்கும் அதி­க­மான மோச­டிச் சம்­ப­வங்­களில் இவர்­கள் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இணை­யக் காதல் மோச­டி­கள், மின்­வர்த்­தக மோச­டி­கள், முத­லீட்டு மோச­டி­கள் அதி­கா­ரி­க­ளைப் போல் நடித்து ஏமாற்­றும் மோச­டி­கள் உள்­ளிட்­ட­வவை அவற்­றில் அடங்­கும்.

காவல்­துறை அண்­மை­யில் வெளி­யிட்ட குற்­றச் செயல் புள்ளி விவ­ரங்­களில் சென்ற ஆண்டு மோச­டிச் சம்­ப­வங்­களில் சிக்­கி­யவர்­கள் மொத்­தம் 633 மில்­லி­யன் வெள்ளிக்­கும் அதி­க­மான தொகை­யைப் பறி­கொ­டுத்­தது தெரி­ய­வந்­தது. இந்­தத் தொகை, அதற்கு முந்­தைய ஆண்டு பறி­போன தொகை­யில் இரண்டு மடங்­கிற்­கும் அதி­கம்.

சந்­தேக நபர்­கள் புரிந்­த­தா­கச் சொல்­லப்­படும் குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்கு அதிகபட்­ச­மாக 10 ஆண்­டுச் சிறைத் தண்­டனை­யும் 500,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

மோச­டி­களைப் பற்றித் தெரிந்து­கொள்ள scamalert.sg என்ற இணை­யத்­தளத்­தை நாடலாம் அல்­லது 1800-722-688 என்ற தொலை­பேசி எண்ணை அழைக்­க­லாம்.