செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
abcf71f9-7543-4c6f-9ace-63126885c22d
-

மரணம் விளைவித்ததை

ஒப்புக்கொண்ட ஆடவர்

ஸ்பொட்டிஸ்வுட் பார்க் சாலையில் உள்ள தனியார் கூட்டுரிமை வீட்டிலிருந்து மதுபான போத்தலைத் தான் எறிந்ததை ஆஸ்திரேலிய ஆடவர் ஓருவர் நீதிமன்றம் ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். அச்சம்பவம் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

கவனமற்ற ஒரு செயலை மேற்கொண்ட குற்றத்தை 49 வயது ஆண்ட்ரூ கொஸ்லிங் ஒப்புக்கொண்டார். அவரின் செயலால் 73 வயது விநியோக ஓட்டுநரான நசியாரி சுனீ உயிரிழந்தார்.

திரு நசியாரியின் மனைவியான திருவாட்டி மன்சியா சிட்ரி மோசமாகக் காயமடையத் தான் காரணமாக இருந்ததையும் கொஸ்லிங் ஒப்புக்கொண்டார்.

சட்டவிரோதமாக முகக்கவசங்களைப் பெற்றவருக்கு அபராதம்

பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அரசாங்கம் இலவசமாக வழங்கிவரும் முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டதற்காக முதலீட்டு நிறுவனம் ஒன்றில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஒரு மாதிற்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நிரந்தரவாசியான 44 வயது பன்டிலா பகாமெத்தனன், ஏமாற்றுவேலை, சட்டவிரோதமாகத் தனிப்பட விவரங்களைப் பெற்றுக்கொண்டது என தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான பன்டிலா, வேலை விவகாரங்களுக்காகத் தன்னுடன் தொடர்பில் இருந்தோரின் அடையாள அட்டை எண்களைப் பெற்றிருக்கிறார். அந்த அடையாள எண்களைக் கொண்டு முகக்கவசங்களைப் பெற்று வசதி குறைந்த மூத்தோருக்கு வழங்கும் எண்ணம் கொண்டிருந்தார்.

முட்டை பண்ணையில் கிருமிப் பரவல்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய மூன்று முட்டை பண்ணைகளில் ஒன்றான செங் சூன் பண்ணையில் 'நியூகாசல்' கிருமிப் பரவல் ஏற்பட்டுள்ளது. பண்ணைகளில் பரவக்கூடிய இந்தக் கிருமியால் கோழிகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கை தற்காலிகமாகக் குறையும்.

இதனால் வரும் வாரங்களில் செங் சூன் பண்ணையின் உணவு விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது. இந்த கிருமிப் பரவலால் உணவுப் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமைப்பு வலியுறுத்தியது.

செங் சூன் பண்ணையில் 'நியூகாசல்' கிருமிப் பரவலுக்கான அறிகுறிகள் சென்ற வாரம் முதலில் தென்பட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் கோ யோவ் கூன் தெரிவித்தார். அப்போது கோழிகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்ததாக அவர் சொன்னார்.