உயிருக்கு ஆபத்து இருந்தால் மட்டுமே 995வை அழையுங்கள்

உயிருக்கு ஆபத்து இருந்தால் மட்டுமே 995வை அழையுங்கள்

1 mins read
8fb3ab66-ea0c-462e-a765-ad7322550fdc
உயிருக்கு ஆபத்து உள்ளவர்களும் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரும் மட்டுமே 995 அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். (படம்: கோப்புப் படம்) -

உயிருக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில் மட்டுமே 995 அவசர எண்ணை அழைக்குமாறு சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படையும் கேட்டுக்கொண்டுள்ளன.

இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் ஒரு நாளைக்குச் சராசரியாக 830 அழைப்புகள் வந்தாகக் கூறப்பட்டது. சென்ற மாதம் அந்த எண்ணிக்கை 635ஆக இருந்தது.

கிருமிப் பரவல் காலத்துக்கு முன் இந்த எண்ணிக்கை 550ஆக இருந்தது.

இந்த ஆண்டு கொவிட்-19 தொற்றுச் சம்பந்தப்பட்ட சுமார் 4,000 அழைப்புகள் 995க்கு வந்தன. அவற்றில் 45 விழுக்காட்டு நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது.

அதோடு, இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பொது மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை நாடி வந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த எண்ணிக்கையில் 80 விழுக்காட்டினருக்கு நாள் சிகிச்சையே தேவைப்பட்டது.

உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது அல்லது உடனடி அவசர சிகிச்சை தேவைப்படும்போது மட்டுமே 995வை அழைக்குமாறு அல்லது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.