மார்சிலிங் வட்டாரத்தில் தீர்வை செலுத்தப்படாத 1,600க்கு மேற்பட்ட கள்ளச் சிகரெட் பெட்டிகளும் சிக்கின.
இதன் தொடர்பில் சீனாவைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் மார்சிலிங் வட்டாரத்தில் உள்ள ஒரு கனரக வாகன் நிறுத்துமிடத்தில் மேற்கொண்ட சோதனையில், கள்ளச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒரு வாகனத்திலிருந்து இன்னொரு வாகனத்துக்குக் கருப்பு குப்பைப் பைகளை ஆடவர்கள் மாற்றுவதை அதிகாரிகள் கண்காணித்தனர்.
சோதைனையிட்டபோது, பைகளில் சிகரெட்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தாக சுங்கத் துறை கூறியது.
1,637 கள்ளச் சிகரெட் பெட்டிகளும், 86 கள்ளச் சிகரெட் பொட்டலங்களும் சிக்கின.
இவற்றுக்கான செலுத்தப்படாத ஒட்டு மொத்த வரியின் மதிப்பு $140,390 என்றும் செலுத்தப்படாத பொருள், சேவை வரியின் மதிப்பு $11,170 என்றும் சுங்கத் துறை குறிப்பிட்டது.