வாரயிறுதியில் திறந்திருக்கும் பலதுறை மருந்தகங்கள்

வாரயிறுதியில் திறந்திருக்கும் பலதுறை மருந்தகங்கள்

1 mins read
b5106573-64fb-4b7a-96da-4d5108b5559b
கிருமித் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே நீட்டிக்கப்பட்ட நேரங்களில் இந்த மருந்தகங்களுக்குச் செல்லலாம்.   (படம்: சாவ்பாவ்) -

இந்த வாரயிறுதியும், அடுத்த வாரயிறுதியும் ஆறு பலதுறை மருந்தகங்கள் திறந்து வைத்திருக்கப்படும்.

கிருமித் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே நீட்டிக்கப்பட்ட நேரங்களில் இந்தப் பலதுறை மருந்தகங்களில் சிகிச்சை நாடாலம் என்று அமைச்சு தெரிவித்தது.

பிப்ரவரி 26, 27, மார்ச் 5, 6 ஆகிய தேதிகள் பலதுறை மருந்தகங்கள் திறந்திருக்கப்படும்

மேற்கொண்ட தேதிகளில் திறந்திருக்கும் பலதுறை மருந்தகங்கள்:

  1. புக்கிட் பாஞ்சாங்
  2. காலாங்
  3. பொங்கோல்
  4. உட்லண்ட்ஸ்
  5. யூனோஸ்
  6. பயனியர்

காய்ச்சல், இருமல், சளிக்காய்ச்சல், சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே நீட்டிக்கப்பட்ட நேரங்களில் இந்த மருந்தகங்களுக்குச் செல்லலாம்.

இந்த அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்ற பொது மருந்தகங்களுக்குச் செல்லுமாறு அமைச்சு அறிவுறுத்தியது. கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான தேசிய செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.