சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் சீனாவைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களைக் கைதுசெய்து இருக்கிறார்கள்.
தீர்வை செலுத்தப்படாத 1,600க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த கள்ள சிகரெட்டுகளை அவர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
மார்சிலிங் கிரசெண்ட் கனரக வாகனப்பேட்டையில் சிங்கப்பூர் டிரக் வாகனத்தில் இருந்து சிங்கப்பூரில் பதிவான வேன் வாகனத்திற்கு கறுப்பு நிற பைகளில் அடைக்கப்பட்டு இருந்த சரக்குகளை இரண்டு ஆடவர்கள் மாற்றி ஏற்றிக்கொண்டு இருந்ததை அதிகாரிகள் பார்த்தனர்.
அதிகாரிகள் வாகனத்தைச் சோதனையிட்டபோது 1,636 அட்டைப் பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகள் இருந்ததைக் கண்டனர். 80 டப்பி சிகரெட்டுகளும் பிடிபட்டன.
அந்த ஆடவர்களில் ஒருவரின் வீட்டில் மேலும் ஒர் அட்டைப்பெட்டியில் கள்ள சிகரெட்டுகள் இருந்தன. ஆறு டப்பி சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சட்டவிரோத செயலில் சம்பந்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கள்ள சிகரெட்டுக்குச் செலுத்த வேண்டிய தீர்வை $140,390 ஆகும். ஜிஎஸ்டி வரி $11,170. பிடிபட்ட இரண்டு பேருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை நேற்று தெரிவித்தது.

