புதிதாக 18,597 பேருக்கு தொற்று

புதிதாக 18,597 பேருக்கு தொற்று

1 mins read
adbab717-305c-4eb2-82bb-7c77a2debbf2
-

சிங்கப்பூரில் வெள்ளிக் கிழமையன்று 18,597 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று உறுதியானது. 1,584 நோயாளிகள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஒப்புநோக்க 1,615 பேர் வியாழக்கிழமை அன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். 46 பேர் தீவிர சிகிச்சை பெற்றனர். 211 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை 11 பேர் உயிர் இழந்தனர்.

சிங்கப்பூரில் வெள்ளிக் கிழமை நிலவரப்படி கொவிட்-19 கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 679,795 ஆக இருந்தது. மரணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 986 ஆகியது.