'பெரும்பாலான பறவைக் கடைகளில் அடிப்படை வசதி இல்லை'

'பெரும்பாலான பறவைக் கடைகளில் அடிப்படை வசதி இல்லை'

1 mins read
2c864bfe-23aa-4206-8bc7-b6207c9fd3c5
-

சிங்கப்பூரில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்குரிய பறவைகளை விற்பனை செய்யும் பெரும்பாலான கடைகளில், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அடிப்படை நல அம்சங்கள் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விலங்குநல மீட்புக் குழுவான 'ஏக்கர்ஸ்' அதனைத் தெரிவித்தது. ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 31 கடைகளை அது சோதித்தது. அவற்றில் 30க்கும் மேலான கடைகளில் நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட பறவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன; 25%க்கும் அதிகமான கடைகளில் பறவைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை.

பாதிக்கும் மேலான கடைகளில் பறவைகள் கூண்டுகளுக்குள் சிறகுகளை விரிக்கப் போதிய இடமின்றி, நெரிசலாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

அதையடுத்து விலங்குகள், கால்நடை மருத்துவச் சேவை அமைப்பான ஏவிஎஸ்-இடம், கூண்டின் அளவு உள்ளிட்ட பல பரிந்துரைகளை 'ஏக்கர்ஸ்' முன்வைத்துள்ளது.

அசுத்தமான, நெரிசலான இடங்களில் இருந்தால் பறவைகளுக்கு அழுத்தம் உண்டாவதுடன், பசியின்மையும், நோயும் ஏற்படலாம். அவற்றுக்குள் சண்டையிடும் குணமும் வளரக்கூடும் என்பதை அது சுட்டிக்காட்டியது.