' பல பறவைக் கடைகளில் அடிப்படை வசதி இல்லை'

' பல பறவைக் கடைகளில் அடிப்படை வசதி இல்லை'

1 mins read
ae3a485b-6444-4f80-ae29-5b7430f0d2bc
-

செல்­லப் பிரா­ணி­க­ளாக வளர்ப்­ப­தற்­கு­ரிய பற­வை­களை விற்­பனை செய்­யும் பெரும்­பா­லான கடை­களில், ஒன்று அல்­லது அதற்­கும் மேற்­பட்ட அடிப்­படை நல அம்­சங்­கள் காணப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூர் விலங்­கு­நல மீட்­புக் குழு­வான 'ஏக்­கர்ஸ்' அத­னைத் தெரி­வித்­தது.

ரக­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் 31 கடை­களை அது சோதித்­தது. அவற்­றில் 30க்கும் மேலான கடை­களில் நோய்­வாய்ப்­பட்ட அல்­லது காயம்­பட்ட பற­வை­கள் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன; 25%க்கும் அதி­க­மான கடை­களில் பற­வை­க­ளுக்கு சுத்­த­மான குடி­நீர் வழங்­கப்­ப­ட­வில்லை.

பாதிக்­கும் மேலான கடை­களில் பற­வை­கள் கூண்­டு­க­ளுக்­குள் சிற­கு­களை விரிக்­கப் போதிய இட­மின்றி, நெரி­ச­லாக அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதை­ய­டுத்து விலங்­கு­கள், கால்­நடை மருத்­து­வச் சேவை அமைப்­பான ஏவி­எஸ்-இடம், கூண்­டின் அளவு உள்­ளிட்ட பல பரிந்­து­ரை­களை 'ஏக்­கர்ஸ்' முன்­வைத்­துள்­ளது.