பொதுப் போக்குவரத்தில் அதிக மானபங்கப் புகார்கள்

பொதுப் போக்குவரத்தில் அதிக மானபங்கப் புகார்கள்

1 mins read
c7a011f8-5da9-4ac5-8feb-dd3646a60493
-

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் கடந்த ஆண்டு அதி­க­மான மான­பங்­கப் புகார்­கள் காவல்­து­றை­யி­டம் சென்­ற­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. பிற­ரின் உடல் அங்­கத்தை பாலி­யல் வேட்­கை­யு­டன் பார்ப்­பது தொடர்­பாக 79 புகார்­களும் மான­பங்­கம் செய்­த­தாக 148 புகார்­களும் செய்­யப்­பட்­டன.

2020ஆம் ஆண்டு இந்த எண்­ணிக்கை முறையே 68 மற்­றும் 145 என இருந்­தன. இந்த இரு வகை­யான குற்­றங்­கள் தொடர்­பில் 65 பேரை டிரான்ஸ்­காம் எனப்­படும் பொதுப் போக்­கு­வ­ரத்து பாது­காப்பு அதி­ர­டிப் படை கைது செய்­தது.

ஆக அண்­மை­யில், பிப்­ர­வரி 10ஆம் தேதி ரயில் பயணி ஒரு­வ­ரி­டம் இருந்து காவல்­து­றைக்கு புகார் சென்­றது. தமது பாவா­டைக்­குள் ஆட­வர் ஒரு­வர் பட­மெ­டுத்­தாக 48 வய­துப் பெண் அந்­தப் புகாரை அளித்­தி­ருந்­தார்.

அத­னைத் தொடர்ந்து, தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்ட காவல்துறை­யி­னர் கண்­கா­ணிப்பு கேமரா உத­வி­யு­டன், சம்­ப­வம் நடை­பெற்ற 12 மணி நேரத்­திற்­குள் ஆட­வ­ரைக் கைது செய்­த­னர்.

வரும் ஆண்­டு­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்பு கட்­டம் கட்­ட­மாக விரி­வ­டைய இருப்­ப­தால் குற்­றம் நிக­ழாத, பாது­காப்­பான பொதுப் போக்­கு­வ­ரத்தை உறு­தி­செய்ய பங்­கா­ளி­க­ளு­ட­னும் சமூ­கத்­து­ட­னும் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக அதி­ர­டிப் படை­யின் பயா­லே­பார் பிரிவு அதி­கா­ரி­யும் காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளரு­மான லிம் சின் சியாங் தெரி­வித்­துள்­ளார். அவசர நேரத்தில் காவல் துறையின் உதவி கிடைப் பதை உறுதி செய்யவும் பணிகள் நடைபெறும் என்றார் அவர்.