புதுமெருகுடன் சேவைக்குத் திரும்பும் ரயில்

புதுமெருகுடன் சேவைக்குத் திரும்பும் ரயில்

1 mins read
060bac71-5729-48b4-bd74-0cb0a40e0843
புதுப்பிக்கப்பட்ட ரயிலில் இடம்பெற்றிருக்கும் புதிய வசதிகளில் சில. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வட­கி­ழக்­குப் பாதை­யில் 2003ஆம் ஆண்டு சேவை­யாற்­றத் தொடங்­கிய ரயில் ஒன்று, மூவாண்டு மேம்­பாட்­டுக்­குப் பிறகு இன்று மீண்­டும் சேவை­யில் இணை­கிறது.

பொது­வாக 30 ஆண்­டு­கள் சேவை­யாற்­றும் திறன்­கொண்ட ரயில்­களை, 15ஆம் ஆண்­டுக்­குப் பிறகு மேம்­ப­டுத்தி புதுப்­பொ­லி­வூட்ட முன்­னரே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

அதன்­கீழ் 2018ஆம் ஆண்டு, மேம்­பாட்­டுக்கு அடை­யா­ளம்­கா­ணப்­பட்ட 25 ரயில்­களில் சேவைக்­குத் திரும்­பி­யி­ருக்­கும் முதல் ரயில் அது.

செங்­காங்­கில் உள்ள எஸ்­பி­எஸ் டிரான்­ஸிட் ரயில் பணி­ம­னை­யில், 116 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான செல­வில் ரயில்­க­ளுக்கு புது­மெ­ரு­கூட்­டப்­ப­டு­கிறது.

ரயி­லின் இருக்­கை­கள், கைப்­பி­டி­கள், புதிய எல்­ஈடி விளக்­கு­கள் உள்­ளிட்­டவை மாற்­றப்­பட்­டுள்­ளன. நான்கு பெட்­டி­களில், நிற்­கும் பய­ணி­கள் சாய்ந்­து­கொள்­வ­தற்­கான வச­தி­யும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

பய­ணப் பாதைக் குறிப்­பு­க­ளுக்­கான ஒட்­டு­வில்­லை­கள் அகற்­றப்­பட்டு, மின்­னி­லக்க முறை­யில் அவை காட்­டப்­ப­டு­கின்­றன. நிலை­யத்­தில் ரயில் நிற்­கும்­போது எந்­தப் பக்­கம் கதவு திறக்­கும் என்­ப­தைக் காட்­டும் வச­தி­யும் இடம்­பெற்­றுள்­ளது. ரயி­லின் செயல்­தி­ற­னைக் கண்­கா­ணிக்­கும் கட்­ட­மைப்­பும் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

முதல் ரயி­லைத் தொடர்ந்து பணி­ம­னை­யில் அடுத்த ரயி­லுக்­கான புதுப்­பிப்­புப் பணி­களும் தொடங்­கி­விட்­டன. ஒரு நேரத்­தில் ஒரு ரயில் என்ற முறை­யில் மொத்­தம் 25 ரயில்­க­ளுக்­கு­மான மேம்­பாட்­டுப் பணி­கள் 2024ல் நிறை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.