பலத்த மழை காரணமாக நேற்று இரு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தீவு விரைவுச் சாலையிலிருந்து பிடோக் நார்த் அவென்யூ 3க்குள் நுழையும் துணைச் சாலையிலும் உபி அவென்யூ 3, யூனோஸ் லிங்க் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டதாகவும் அந்தப் பகுதிகளில் உதவி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் அனுப்பப்பட்டதாக வும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. பிற்பகல் 1 மணி முதல் கிழக்கு வட்டா ரத்தில் சில கால்வாய்களில் நிரம்பும் அளவுக்கு வெள்ள நீர் ஓடியதாக கழகம் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. மத்திய வட்டாரத்தில் மெக்ஃ பர்சன், அப்பர் பயாலேபார் ரோடு, தென்வட்டாரத்தின் தஞ்சோங் பகார் ரோடு போன்ற இடங்களிலும் கால்வாய்களில் வெள்ளநீர் பாய்ந்தோடியதாக அது குறிப்பிட்டது. பின்னர் வெள்ளம் தணிந்துவிட்டதாக பிற்பகல் 2.35 மணியளவில் கழகம் கூறியது.
இரு இடங்களில் திடீர் வெள்ளம்
1 mins read
-

