மருத்துவமனைகளில் குறையும் நோயாளிகள் எண்ணிக்கை

மருத்துவமனைகளில் குறையும் நோயாளிகள் எண்ணிக்கை

1 mins read
35343fbf-4089-448a-a37e-b6756e4c5041
-

சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வ­ம­னை­களில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­காக சிகிச்சை பெறும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை, வெள்­ளிக்­கி­ழ­மை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் சனிக்­கி­ழமை குறைந்­த­தா­கச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சனிக்­கி­ழமை மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை எடுத்­துக்­கொண்­டோர் எண்­ணிக்கை 1,553; வெள்­ளிக்­கி­ழமை அது 1,584ஆக இருந்­தது. இருப்­பி­னும், தீவிர சிகிச்­சைப் பிரி­வில் நோயா­ளி­கள் எண்­ணிக்கை சற்றே அதி­க­ரித்து 46ல் இருந்து 50 ஆனது.

212 பேருக்கு செயற்­கைச் சுவா­சக் கரு­வி­கள் பொருத்­த­வேண்­டி­யி­ருந்­தது. இந்­நி­லை­யில், தொடர்ந்து மூன்று நாள்­க­ளாக நோய்த்­தொற்று உறு­தி­யா­னோர் எண்­ணிக்கை இரு­ப­தா­யி­ரத்­துக்­கும் கீழ் குறை­வா­கப் பதி­வா­ன­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. சனிக்­கி­ழமை இரவு கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னோர் எண்­ணிக்கை 16,587. தொற்று காரண மாக 13 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

புதி­தா­கக் கிரு­மித்­தொற்று அடை­யா­ளம் காணப்­பட்­டோ­ரில் 143 பேர் வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள். சனிக்­கி­ழமை, வாராந்­தர கொவிட்-19 கிரு­மித்­தொற்று விகி­த­மும் சற்­றுக் குறைந்து 1.21 ஆன­தா­கக் கூறப்­பட்­டது. வெள்­ளிக்­கி­ழமை அது 1.26ஆக இருந்­தது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.