உழைத்தால் என்றும் பலன் உண்டு

உழைத்தால் என்றும் பலன் உண்டு

1 mins read
70bb8ceb-6e21-48bd-bafa-8d4748902320
கோ. சோலை வள்ளி, 19பன்னாட்டு உறவுகள் தொடர்பான துறையில் பயில விருப்பம் -

பள்ளி முகாம் தலை­வர், மென்­பந்து அணித் தலை­வர், சிண்டா தொண்­டூ­ழி­யர் எனப் பல்­வேறு பொறுப்­பு­களை கோ. சோலை வள்ளி ஏற்­றி­ருந்­தார். ஆனால், தனது தொடக்­கக் கல்­லூ­ரி­யின் இரண்­டா­மாண்டு தொடக்­கத்­தில் திண­றி­னார். எல்­லா­வற்­றுக்­கும் சரி­ச­ம­மாக நேரம் ஒதுக்க முடி­யாத நிலை­யில் அவர் மன உளைச்­ச­லுக்கு ஆளா­னார்.

"பிற­ரி­டம் உதவி கேட்­பது பல­வீ­னம் அல்ல. நம்­மையே நாம் பரா­ம­ரித்­துக்­கொள்­வ­தற்­கான ஒரு வழி­மு­றை­தான் அது. இதை நான் உணர்­ந்த பிறகு, நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து தேர்ச்சி பெறக் கடி­ன­மாக முயன்­றது பலன் அளித்­தது," என்­றார் ஆங்­கிலோ சீன தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயின்ற 19 வயது சோலை வள்ளி.

பர­ப­ரப்­பான கல்­லூரி வாழ்க்­கை­யில் தொண்­டூ­ழி­யப் பணி மன­நி­றைவை அளித்­தது என்­றார் சோலை வள்ளி. கடந்த ஆண்டு கணி­னித் திறன் பட்­ட­றைக்­கான ஏற்­பாட்­டில் அவர் உத­வி­னார். தொடக்­க­நிலை மாண­வர்­க­ளு­டன் கலந்­து­ற­வா­டி­யது தனக்கு இனி­தான ஓர் அனு­ப­வ­மாக இருந்­தது என அவர் குறிப்­பிட்­டார்.

சிர­மப்­பட்டு படித்­த­தற்கு நற்­ப­லன் கிடைத்­துள்­ள­தாக சோலை வள்ளி நம்­பு­கி­றார். மேல்­நி­லைத் தேர்­வில் தான் அடைந்­துள்ள தேர்ச்சி வழி தன் குடும்­பத்­துக்­கும் அவர் பெருமை சேர்த்­துள்­ள­தில் மகிழ்ச்சி கொள்­கி­றார்.

சிங்­கப்­பூர் தேசிய அள­வில் எதிர்­நோக்­கும் சிக்­கல்­க­ளைக் களைய விரும்­பு­ம் சோலை வள்ளி, பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பன்­னாட்டு உற­வு­கள் பயில விருப்­பம் தெரி­வித்­துள்­ளார்.