சோதனைகள் கற்பித்த பாடம்

சோதனைகள் கற்பித்த பாடம்

1 mins read
6a3d384b-1d4c-49c7-9f7e-e94edfb43ed6
முகமது ஃபாஹீம் ஃபாரூக், 19வணிகத்துறையில் பணியாற்ற விருப்பம் -

மேல்­நி­லைத் தேர்­வுக்­குச் சில நாள்­களே இருந்­த­போது தாயா­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னதை அறிந்­தார் ஃபாஹீம். இருப்­பி­னும், தொடக்­கக் கல்­லூரி வாழ்க்­கை­யின் இறு­திக் கட்­டத்­தில் எதிர்­நீச்­சல் போட்­டாக வேண்­டும் என்று அவர் முடி­வெ­டுத்­தார்.

படித்­துக்­கொண்டே தாயா­ரை­யும் கவ­னித்­துக்­கொண்­ட­தாக ஆங்­கிலோ சீன தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயின்ற 19 வயது முக­மது ஃபாஹீம் ஃபாரூக் நினை­வு­கூர்ந்­தார்.

கணி­தப் பாடத்­தில் ஃபாஹீமுக்­குக் கொள்ளை ஆர்­வம். மேல்­நிலை கணி­தப் பாடத்­து­டன் மொத்­தம் இரண்டு கணி­தப் பாடங்­களை அவர் பயின்­றார்.

இருப்­பி­னும், 2020ஆம் ஆண்­டில் கணி­தப் பாடத்­தில் அவர் தேர்ச்சி பெறா­தது அவ­ரது நம்­பிக்­கை­யைக் குலைத்­தது.

நண்­பர்­கள் அளித்த ஊக்­கத்­தால் மீண்­டும் கணி­தத்­தில் கவ­னம் செலுத்தி முன்­னே­றி­னார் அவர். அது­வரை தலை­மைத்­து­வப் பொறுப்­பு­களில் முன் அனு­ப­வம் இல்­லாத ஃபாஹீம், அக்­க­ட­மை­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்ள தைரி­ய­மாக முன்­வந்­தார்.

தமிழ்க் கலா­சார மன்­றத்­தில் செய­லா­ள­ராக இருந்த அவ­ருக்கு, தனது திறன்­க­ளின் மீது நம்­பிக்கை பிறந்­த­து­டன் தன்­னைக் குறைத்து மதிப்­பி­டும் பழக்­க­மும் நீங்­கி­யது.

"நமது நடத்­தை­தான் நமக்கு மரி­யா­தை­யைத் தேடித் தரும் என்­பதை ஒரு தலை­வ­ராக உணர்ந்­து­கொண்­டேன்," என்­றார் ஃபாஹீம். கணி­தத்­தில் உள்ள ஆர்­வத்­தால் எதிர்­கா­லத்­தில் வணி­கத்­து­றை­யில் பணி­யாற்ற விரும்­பு­கி­றார் ஃபாஹீம்.