அமைச்சர்: உக்ரேனில் ஒன்பது சிங்கப்பூரர்கள்

அமைச்சர்: உக்ரேனில் ஒன்பது சிங்கப்பூரர்கள்

1 mins read
a6e9b425-bc7f-41d4-8656-412e8e20f05b
-

கிழக்கு ஐரோப்­பிய நாடான உக்­ரேனில் குறைந்­த­பட்­சம் ஒன்­பது சிங்­கப்­பூ­ரர்­கள் இன்னமும் இருப்­ப­தாக வெளி­யு­றவு அமைச்­சர் விவியன் பால­கி­ருஷ்­ணன் நேற்று நாடாளுமன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அவர்­களில் எட்­டுப்­ பேர் அமைச்­சு­டன் தொடர்­பில் இருக்­கி­றார்­கள். இதர ஒருவரு­டன் தொடர்­பு­கொள்ள அமைச்சு முயன்று வரு­கிறது.

சூழ்­நிலை அனு­ம­திக்­கும்­பட்­சத்­தில் உக்­ரே­னில் இருந்து அவர்­கள் வெளியேறு­வ­தற்­கான வாய்ப்­பு­களை அமைச்சு ஆராய்ந்­து­ வ­ரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பாது­காப்பே முக்கியம் என்­றார் அவர்.

கூடு­மான வழி­களில் முடிந்த அள­வுக்கு அமைச்சு அவர்­க­ளுக்கு உத­வும் என்று மன்­றத்­தில் தாக்­கல் செய்த அமைச்சுநிலை அறிக்கையில் வெளியுறவு அமைச்சர் குறிப்­பிட்டார்.

உக்­ரேன்மீது ரஷ்யா படை எடுத்து தாக்கி வரு­கிறது. இதன் தொடர்­பி­லான சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாடு பற்றி அந்த அறிக்கை விளக்­கம் அளித்­தது.

"பாது­காப்­பான இடங்­களில் தங்கி இருங்­கள்; விழிப்­பு­டன் இருங்­கள்; அதி­காரிகளின் ஆலோ­ச­னை­களைக் கேட்டு நடந்துகொள்­ளுங்­கள்," என்று உக்­ரே­னில் உள்ள சிங்­கப்­பூ­ரர்­களுக்கு அமைச்­சர் அறி­வுரை கூறி­னார்.

இத­னி­டையே, சிங்­கப்­பூர் ஏர்லைன்ஸ் (எஸ்­ஐஏ) நிறு­வ­னம், சாங்கி விமான நிலை­யத்­திற்­கும் ரஷ்­யா­வின் மாஸ்கோ நக­ருக்­கும் இடை­யி­லான அனைத்து விமா­னச் சேவை­க­ளை­யும் கால­வ­ரம்­பின்றி ரத்து செய்­து­விட்­டது.

இதனை அது தனது இணை­யத்­த­ளத்­தில் தெரி­வித்­தது.

சேவை­கள் ரத்­தா­ன­தால் ஏற்­படக்­கூ­டிய வச­திக்­கு­றை­வுக்­காக அது சம்பந்­தப்­பட்ட பய­ணி­க­ளி­டம் மன்­னிப்புக் கேட்­டுக்கொண்­டது.