வரவுசெலவுத் திட்டம் பற்றி எதிர்க்கட்சிகள்

வரவுசெலவுத் திட்டம் பற்றி எதிர்க்கட்சிகள்

1 mins read
5b2c70e5-06e1-42a0-a52b-24251f1c51fa
-

சிங்கப்பூர் அரசாங்கத்தின் 2022 வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இதனால் அந்தத் திட்டத்தைத் தான் எதிர்க்கப்போவதாகவும் பாட்டாளிக் கட்சி தெரிவித்தது.

என்றாலும், சிங்கப்பூர் சமூக இணக்கத்தைப் புதுப்பித்து அதைப் பலப்படுத்தி அதன்மூலம் நியாயமான, மேலும் பலரை உள்ளடக்கிய, கட்டிக்காக்கக் கூடிய சமூகத்தைச் சாதிக்க வேண்டும் என்ற வரவுசெலவுத் திட்டத்தின் இலக்கைக் கட்சி ஆதரிக்கும் என்று எதிர்த்தரப்பு தலைவரான பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதனிடையே, ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கான தேவை இல்லை என்று தான் கருதுவதால் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்கப்போவ தில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கூறியது.

அக்கட்சியின் தொகுதி இல்லாத எம்பி லியோங் மன் வாய் மன்ற விவாத்தில் பேசிய போது இவ்வாறு கூறினார்.