அடுத்த பிரதமர்: விரைவாக முடிவெடுக்க 4ஜி தலைவர்களுக்கு உறுப்பினர் வலியுறுத்து

அடுத்த பிரதமர்: விரைவாக முடிவெடுக்க 4ஜி தலைவர்களுக்கு உறுப்பினர் வலியுறுத்து

2 mins read
5d1e4ce5-7d5c-4c98-90e0-581e774ddb98
சிங்கப்பூர், பல கொள்கைகளை முன்னதாகவே சிறந்த முறையில் திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அரசியல் வாரிசைப் பொறுத்தவரை அது இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று உறுப்பினர் கிறிஸ்டஃபர் டி சூசா தெரிவித்தார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சிங்­கப்­பூ­ரின் அடுத்த பிர­த­மர் யார் என்­பதை மக்­கள் செயல் கட்சி விரை­வாக முடிவு செய்ய வேண்­டிய தேவை இருக்­கிறது என்று ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் கிறிஸ்­டஃபர் டி சூசா நாடாளு­மன்றத்­தில் தெரி­வித்­தார்.

மன்­றத்­தில் நான்­காம் தலை­முறைத் தலை­வர்­க­ளி­டம் (4ஜி) நேர­டி­யாக உரை­யாற்­றிய அவர், அடுத்த அர­சி­யல் வாரி­சுக்குத் திட்­ட­மி­டு­வ­தில் கவ­னம் செலுத்­தும்­படி அவர்களைக் கேட்­டுக்­கொண்­டார்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், நான்­காம் தலை­முறைத் தலை­வர்­க­ளின் தலை­வர் என்ற பொறுப்­பில் இருந்து வில­கிக்­கொண்டு கிட்­டத்­தட்ட ஓராண்டு காலம் ஓடி­விட்­டது. அவர், பிரதமர் லீ சியன் லூங்­கி­டம் இருந்து அடுத்த பிர­த­மர் பத­வியை ஏற்­க­வி­ருந்­தார்.

பிர­த­மர் லீக்கு இந்த ஆண்டு பிப்­ர­வரி 10ஆம் தேதி 70 வயது ஆனது. அதற்கு முன்­பா­கவே பிர­த­மர் பத­வியை அடுத்த தலை­முறைத் தலை­வ­ரி­டம் ஒப்­படைத்து­வி­ட­லாம் என்று திரு லீ நம்­பி­இருந்­தார். ஆனால், கொவிட்-19 தொற்­றில் இருந்து சிங்­கப்­பூர் மீண்டு வரு­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் தான் பிர­த­மர் பத­வியில் தொட­ரப்போவ­தாக திரு லீ பிறகு அறி­வித்­தார்.

தன்­னு­டைய வாரிசு யார் என்­பதை திரு லீ அறி­விக்­க­வில்லை. ஆனா­லும் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் ஆகி­யோர் அடுத்த பிர­த­மர் பத­விக்­கு வாய்ப்புள்ளவர்களில் முன்­னணியில் இருக்­கி­றார்­கள்.

கல்வி அமைச்­சர் சான், இப்­போது மக்­கள் செயல் கட்­சி­யின் இரண்­டா­வது உதவித் தலை­மைச் செய­லா­ள­ராக இருக்­கி­றார்.

தங்­கள் தலை­வர் யார் என்­பதைத் தீர்­மா­னிப்­பது 4ஜி குழு முழு­வ­தை­யுமே சார்ந்­தது என்று திரு டி சூசா தெரி­வித்­தார்.

பல கொள்­கை­க­ளைப் பொறுத்­த­வரை, சிங்­கப்­பூர் முன்­ன­தா­கவே திட்­ட­மிட்டு சிறந்த முறை­யில் செயல்­பட்டு வந்­தி­ருக்­கிறது என்பதைத் தமது உரை­யில் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இருந்­தா­லும் அர­சி­யல் வாரிசை இன்­ன­மும் அது தேர்ந்­தெ­டுக்­க­வில்லை என்று அவர் கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் தேசிய வரவு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்போது பேசிய அவர், கொள்­கை­கள் சிறந்த பலன்­களை ஏற்­ப­டுத்­து­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில், தொடர்ச்சி யாக தலை­வர்­கள் உருவாவதை நாம் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­திக் கூறி­னார்.