தெமாசெக் அறநிறுவனம், வசதிகுறைந்தோருக்கான இலவச முகக்கவச விநியோகத்தை நேற்று தொடங்கியது.
50 முகக்கவசங்கள் கொண்ட பொட்டலம், மார்ச் 13ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
தீவெங்கும் அமைக்கப்பட்டு உள்ள 160 விநியோக இடங்களில் இருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். கடைத்தொகுதிகள், பேரங்காடிகள் போன்றவற்றில் விநியோகத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சமூக சுகாதார உதவித்திட்ட நீலம், ஆரஞ்சு அட்டை (சாஸ்), பொது நிதியுதவி அல்லது சிறப்பு மானியத்துக்கான அட்டை போன்றவற்றைக் காட்டி, தகுதிஉடையோர் முகக்கவசப் பொட்டலத்தைப் பெறலாம்.
முதல் நாளான நேற்று இலவச முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்ட குடியிருப்பாளர்கள் சிலர், விநியோகம் விரைவாகவும் சுமுகமாகவும் இடம்பெற்றதாகக் கூறினர்.
தெமாசெக் அறநிறுவனம், ஏழாவது முறையாக இலவச முகக்கவசங்களை விநியோகிக்கிறது.

