தடுப்பூசித் தகுதி இழந்த 21,800 பேரில் 48% சிங்கப்பூரர்கள்

தடுப்பூசித் தகுதி இழந்த 21,800 பேரில் 48% சிங்கப்பூரர்கள்

2 mins read
2ae83bb0-21cb-4822-9111-ebac9fcfe913
-

சிங்­கப்­பூ­ரில் கூடு­தல் தடுப்­பூ­சியை (பூஸ்­டர்) உரிய காலத்­தில் போட்­டுக்­கொள்­ளாத கார­ணத்­தால் பிப்­ர­வரி 14ஆம் தேதிவாக்­கில் 21,800 பேர் கொவிட்-19 தடுப்­பூ­சித் தகு­தியை இழந்­த­னர்.

அவர்­களில் ஏறக்­கு­றைய பாதிப் பேர், அதா­வது 48 விழுக்­காட்­டி­னர் சிங்­கப்­பூ­ரர்­கள் என்று சுக­தாார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அவர்­களில் இதர 14 விழுக்­காட்­டி­னர் நிரந்­தரவாசி­கள்.

மற்ற 38 விழுக்­காட்­டி­னர் வேலை அனுமதிச்சீட்டு ஊழி­யர்­கள்.

கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள தவ­றிய சிங்­கப்­பூ­ரர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் 60 வய­தும் அதற்கு அதிக வய­தும் உள்ள முதி­ய­வர்­கள் என்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பி­ன­ரின் கேள்­விக்கு அளித்த பதி­லில் அமைச்­சர் கூறி­னார்.

அவ்­வ­ள­வாக வெளியே செல்­வதில்லை என்­ப­தால் கூடு­தல் தடுப்­பூ­சியைத் தாங்­கள் போட்­டுக் கொள்­ள­வில்லை என்று பெரும்­பாலானவர்­கள் தெரி­வித்­த­னர்.

முன்­பு போட்டுக்கொண்ட தடுப்­பூ­சியே போதிய பாதுகாப்­பைத் தரும் என்­ப­தால், கூடு­தல் தடுப்பூசி யைப் பிறகு போட்­டுக்கொள்­ள­லாம் என்று தாங்­கள் இருந்­து­விட்­ட­தா­க­வும் அவர்­கள் கூறியதாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

வெளி­நாட்­டி­ன­ரைப் பொறுத்­த­வரை, அவர்­கள் எதற்­காக கூடுதல் தடுப்­பூ­சியை நாட­வில்லை என்­ப­தற்­கான கார­ணத்தை அமைச்சு மதிப்­பிட முடி­ய­வில்லை என்­றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூ­ரில் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தற்­குப் பிறகு 270 நாள்களுக்­குள் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றால் ஒரு­வர் தடுப்­பூசித் தகு­தியை இழந்­துவி­டு­வார்.

அந்­தத் தகு­தியை இழந்­த­வர்­கள் முக்­கி­ய­மாக உண­வகங்­களில் அமர்ந்து சாப்­பிட முடி­யாது; கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் செல்ல முடி­யாது. கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளும்­படி மக்­க­ளுக்கு அமைச்சு தொடர்ந்து ஊக்­க­மூட்­டும் என்­றும் அமைச்­சர் திரு ஓங் தெரி­வித்­தார்.