சிங்கப்பூர் ஆயுதப் படையினரிடையே கொவிட்-19 தொற்று, சென்ற வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் 17 விழுக்காடு அதிகரித்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோர் சமூக அளவில் கிருமித்தொற்றுக்கு ஆளானதாகத் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஹெங் சீ ஹாவ் குறிப்பிட்டார்.
இருப்பினும் கிருமி தொற்றியோர் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.
இதற்கிடையே, ஓமிக்ரான் அலை தொடங்கியதில் இருந்து, சிங்கப்பூரில் 27,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று இரண்டு மருத்துவமனைகளும் கூறின.
இந்நிலையில், சிங்கப்பூரில் தொடர்ந்து நான்காவது நாளாக கொவிட்-19 கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 20,000க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை புதிதாக 14,228 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தெரி விக்கப்பட்டது.

