எம்ப்ளாய்மண்ட் பாஸ், எஸ் பாஸ்தாரர்களின் தொடக்க சம்பளத்தை செப்டம்பரில் முதல் உயர்த்த திட்டமிருக்கிறது.
இதன் விளைவாக வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளத்தை உயர்த்த வேண்டிய கட்டாயநிலை ஏற்படக்கூடும் என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி ஃபூ மீ ஹார் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
வேலை அனுமதி முறை மேலும் ஒளிவுமறைவு இல்லாமல், செலவு பிடிக்காமல் இருக்கும் வகையில் சம்பளம் சாராத பலதரப்பட்ட அம்சங்களைப் பரிசீலிக்கக்கூடிய ஒரு புள்ளி முறையை அமல்படுத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

