'விநியோக ஓட்டுநர்கள் வறுமையால் தவிக்கக்கூடும்'

'விநியோக ஓட்டுநர்கள் வறுமையால் தவிக்கக்கூடும்'

1 mins read
12b58289-19ec-439f-8d1b-f4bd348b120b
-

குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­களைச் சேர்ந்­தோர் குறு­கிய காலத்­தில் கணி­ச­மான தொகையை சம்­பா­திக்க உணவு விநியோக, தனி­யார் வாடகை வாக­னத் தளங்­கள் கைகொ­டுக்­கின்­றன. எனி­னும், இவற்­றுக்கு வேலை செய்­யும் விநி­யோக ஓட்­டு­நர்­கள் வறு­மை­யில் சிக்­கு­வ­தோடு நிலை­யற்ற சூழ­லால் பாதிக்­கப்­படும் அபா­யத்தை எதிர்­நோக்­கக்­கூ­டும். கொள்கை ஆய்­வுக் கழ­கம் வெளி­யிட்­டுள்ள ஆய்வு ஒன்­றின் தொடர்­பில் அதன் ஆய்­வா­ளர்­கள் இவ்­வாறு எச்­ச­ரித்­துள்­ள­னர்.

போது­மான சேமிப்பு இல்­லா­த­தோடு மத்­திய சேம­நி­திக் கணக்­கில் போது­மான தொகை இல்­லா­மல் போனால் வீடு வாங்­கு­வது போன்ற தங்­க­ளின் கன­வு­களை நன­வாக்க விநி­யோக ஓட்­டு­நர்­கள் சிர­மப்­ப­ட­லாம். அத­னால் ஊழி­யர்­களும் நிறு­வ­னங்­களும் மத்­திய சேம­நி­திக் கணக்­கு­கள், காப்­பு­று­தித் திட்­டங்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­குத் தொகை நிரப்புவதைக் கட்­டா­ய­மாக்­கு­வது போன்ற பரிந்­து­ரை­க­ளைக் கொள்கை ஆய்­வுக் கழ­கம் முன்­வைத்­தது.

வேறு துறை­க­ளுக்கு மாற விநி­யோக ஓட்­டு­நர்­களுக்­கும் தனி­யார் வாடகை வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கும் கூடு­தல் உதவி வழங்­க­லாம் என்றும் கொள்கை ஆய்­வுக் கழ­கம் சொன்­னது.