உக்ரேனில் குடும்பம்; மகள் சிங்கப்பூரில் தவிப்பு

உக்ரேனில் குடும்பம்; மகள் சிங்கப்பூரில் தவிப்பு

1 mins read
4bbde1f0-26b6-4f27-88ee-7bb81c15359b
-

உக்­ரே­னில் தனது குடும்­பத்­திற்கு என்ன ஆனதோ என்று நேற்று முன்­தி­னம் மிகுந்த கவ­லைக்கு ஆளா­னார் சிங்­கப்­பூ­ர­ரான நத்­தே­லியா லொசொவ்ஸ்கா. உக்­ரே­னில் தனது தந்தை, சகோ­தரி உள்­ளிட்­டோ­ருக்கு வாட்ஸ்­அப் செய­லி­வழி தான் அனுப்­பிய குறுந்­த­க­வல்­கள் அவர்­க­ளைச் சென்­றடை­ய­வில்லை என்று திரு­வாட்டி லொசொவ்ஸ்கா கூறி­னார்.

சில மணி­நே­ரத்­திற்­குப் பிறகு அர­சாங்க ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றும் முன்­னாள் அர­ச­தந்­தி­ரி­யான இவ­ரின் தந்தை குறுந்­த­க­வல்­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தார். இதற்­கி­டையே லொசொவ்ஸ்கா பெரும் மன­வுளைச்­ச­லுக்கு ஆளானார்.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த திரு மகேஷ் ராயை மண­மு­டித்த லொசொவ்ஸ்கா 12 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் வசித்து வரு­கி­றார். இரு­வ­ருக்­கும் மூன்று பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள் (படம்).

ரஷ்யா உக்­ரேன் மீது படை­யெ­டுத்­த­தால் உல­கெங்­கும் ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்கு இவர்­கள் ஓர் எடுத்­துக்­காட்டு.