சாந்தா பாஸ்கருக்குப் பிரதமர் லீ அஞ்சலி

சாந்தா பாஸ்கருக்குப் பிரதமர் லீ அஞ்சலி

1 mins read
63e078cc-4296-4367-bf5d-ef2cd3b78fd7
திருமதி சாந்தா பாஸ்கர். படம்: திமத்தி டேவிட் / தமிழ் முரசு -

நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் மறைவுக்குப் பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஆழ்ந்த அனு­தா­பத்­தைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

"திரு­மதி சாந்தா பாஸ்­கர் நேற்று நம்­மை­விட்­டுப் பிரிந்­த­தைக் கேள்விப்­பட்­ட­தும் வருத்­த­ம­டைந்­தேன். சிங்­கப்­பூ­ரில் இந்­திய நடனத்­திற்கு அவரே முன்­னோடி, நமது பல கலா­சார மரபை எடுத்­துக்­காட்டும் முன்­ன­ணிக் கலை­ஞர்," என திரு லீ ஃபேஸ்புக் பதி­வில் கூறி­னார்.

"சிங்­கப்­பூ­ரின் கலை மரபை வளர்ப்­பது மட்­டு­மின்றி அதன் தொடர்­பி­லான விவ­ரங்­க­ளை­யும் திறன்­க­ளை­யும் இளம் தறை­மு­றை­யி­ன­ரைக் கொண்டு சேர்ப்­ப­தி­லும் அவ­ருக்கு மிகுந்த ஆர்­வம் இருந்­தது. மற்ற இனக் கலா­சார அம்­சங்­க­ளைச் சேர்த்­த­வாறு பல தலை­முறை நட­னக் கலை­ஞர்­க­ளுக்­குப் பல்­வேறு பாரம்­ப­ரிய இந்­திய நட­னங்­க­ளைத் திரு­மதி பாஸ்­கர் கற்­றுத் தந்தார், " என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.