மனை­வியை துன்­பு­றுத்­திய ஆட­வ­ருக்­குச் சிறை

மனை­வியை துன்­பு­றுத்­திய ஆட­வ­ருக்­குச் சிறை

1 mins read
8f4206ae-088f-4b84-8314-be515ce3df0e
-

வெவ்­வேறு சம்­ப­வங்­களில் மனை­வி­யைத் துன்­பு­றுத்­திய 26 வயது முக­மது சபீக்­கிற்கு 16 வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டுள்ள அவ­ருக்கு, தீர்ப்பு வழங்­கும்­போது, மனை­வி­யைத் துன்­பு­றுத்­தி­யது, காது, கன்­னம் போன்ற பாகங்­களில் தாக்­கி­யது, பொது இடத்­தில் கண்­ணில் குத்­தி­யது உள்­ளிட்ட மேலும் ஐந்து குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்­பட்­ட­தாக நீதி­மன்­றம் குறிப்­பிட்­டது.

22 வயது மனை­வி­யின் முகத்­துக்கு நேரே கத்­த­ரிக்­கோலை காட்டி மிரட்­டிய அவர் பின்­னர் தலை முடியை நறுக்­கி­னார்.

உத­வி­கேட்­டுக் கூக்­கு­ர­லிட்ட மனைவி, வீட்டு உரி­மை­யா­ள­ரி­டம் பாது­காப்பு நாடி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

அதன்­பி­றகு அவர் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தார்.

முன்­னைய சம்­ப­வங்­க­ளுக்­கான ஆதா­ரங்­க­ளை­யும் அவர் சமர்ப்­பித்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது.