கனத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

கனத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

1 mins read
c53cd492-41a4-4da9-8443-5dc9885d7e8a
மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களில் இடியுடம் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது (படம்: கோப்புப் படம்) -

சிங்கப்பூரில் கனத்த மழை பெய்ததன் காரணமாக சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் பகார், தெக் வாய், அப்பர் சிராங்கூன் சாலை அருகே உள்ள சில இடங்கள், அங் மோ கியோ அவென்யூ 5 ஆகிய வட்டாரங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது பயனீட்டுக் கழகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

தஞ்சோங் பகார், கேரக் ரோடு, சுவா சூ காங் அவென்யூ 1, தெக் வாய் லேன் ஆகிய பகுதிகளில் மழைநீர் அளவு 90 விழுக்காட்டை எட்டியதால் வெள்ள அபாயம் நிலவியதாக பதிவிடப்பட்டது.

இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் இடியுடம் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.