பணிப்பெண்களுக்கான மருத்துவப் பரிசோதனை நிபந்தனை ஒத்திவைப்பு

பணிப்பெண்களுக்கான மருத்துவப் பரிசோதனை நிபந்தனை ஒத்திவைப்பு

1 mins read
82f5dcb9-6e71-4034-9511-3382ea9874a8
-

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் இல்­லப் பணிப்­பெண்­கள், வேலை அனு­ம­திச் சீட்டு வைத்­தி­ருக்­கும் இதர பெண் ஊழி­யர்­கள் ஆகியோர் ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு முறை மருத்­து­வப் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள­வேண்­டும். சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­பவங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தைத் தொடர்ந்து இந்த நிபந்­தனை ஒத்தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புத் துறை எதிர்­நோக்­கும் சுமை­யைக் குறைக்க இந்த நிபந்­தனை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது என்று மனி­த­வள அமைச்சு தெரிவித்தது. குறிப்­பாக தனி­யார் மருந்­த­கங்­களுக்கும் பல­துறை மருந்­த­க­ளுக்­கும் உதவ இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு சொன்னது.

தங்­க­ளின் இல்­லப் பணிப்­பெண்­களை மருத்­து­வப் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வைக்­கு­மாறு கடந்த ஜன­வரி மாதத்­துக்­கும் சென்ற மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் சில முத­லா­ளி­க­ளுக்கு அறிக்கை அனுப்­பப்­பட்­டது. அவ்வாறு செய்யாத முத­லா­ளி­களுக்கு இனி அடுத்த மாதம் 30ஆம் தேதி­வரை நேரம் உள்­ளது.

சில முத­லா­ளி­க­ளுக்கு இம்­மா­த­மும் அடுத்த மாத­மும் அறிக்கை அனுப்­பப்­ப­ட­வி­ருந்­தது. இவர்­களுக்கு அடுத்த மாதம் இறு­தி­யிலி­ருந்து தபால் வழி­யா­க­வும் மின்­னஞ்­சல் வாயி­லா­க­வும் அறிக்கை அனுப்­பப்­படும். தங்­க­ளிடம் பணி­யாற்­று­வோரை இப்­போதே மருத்­து­வப் பரி­சோதனையை மேற்­கொள்­ள­வைக்க முத­லா­ளி­கள் எண்­ணி­னால் மருந்­த­கங்­கள் அவர்­க­ளைத் திருப்பி அனுப்­பமாட்டா.

எனி­னும், அவ்­வாறு செய்­யா­மல் பரி­சோ­த­னையை ஒத்­தி­வைக்­கு­மாறு முத­லா­ளி­கள் கேட்­டுக்­கொள்­ளப்­படு­கின்­ற­னர். கொவிட்-19 கிருமித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் ஆறு பல­துறை மருந்­தகங்­கள் கூடு­தல் நேரம் இயங்கி வரு­கின்­றன. அதைத் தொடர்ந்து இந்த நிபந்தனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.