சிங்கப்பூரின் சில இடங்களில் கனமழை, திடீர் வெள்ளம்

சிங்கப்பூரின் சில இடங்களில் கனமழை, திடீர் வெள்ளம்

1 mins read
595d492a-364c-41d1-9bd6-0cac54edf9a5
நீர் மட்டம் அதிகரித்திருந்த புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள பாங் சுவா குளம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் நேற்று பிற்­ப­கல் தொடர்ந்து பெய்த கன மழை­யால் சில இடங்­களில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது.

பொங்­கோல் வே பகு­தி­யில் நேற்று மாலை ஐந்­தறை மணி­யளவில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. தெம்­ப­னிஸ் விரை­வுச்­சாலை, காலாங்-பயா லேபார் விரை­வுச்­சாலை ஆகி­ய­வற்­றுக்கு அருகே பொங்­கோல் வே அமைந்­துள்­ளது.

பிற்­ப­கல் சுமார் 3.50 மணிக்கு தஞ்­சோங் பகார், கிரெய்க் சாலை­களில் உள்ள சாக்­க­டை­க­ளி­லும் கால்­வாய்­க­ளி­லும் நீரின் அளவு கொள்­ள­ள­வில் 90 விழுக்­கா­டைத் தொட்­ட­தாக தேசிய தண்­ணீர் முகவை சமூக வலைத்­த­ளங்க­ளில் தெரி­வித்­தது. சுவா சூ காங் அவென்யூ ஒன்று, தெக் வை லேன் ஆகி­ய­வற்­றி­லும் பிற்­ப­கல் 4.10 மணி­ய­ள­வில் இவ்­வாறு நிகழ்ந்­த­தா­க­ முகவை குறிப்­பிட்­டது.

அல்­ஜு­னிட், அப்­பர் பயா லேபார், உள்­ளிட்ட சாலை­க­ளி­லும் திடீர் வெள்­ளம் ஏற்­படும் அபா­யம் இருந்­த­தாக எச்­ச­ரிக்கப்பட்டிருந்தது.