தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதின்ம வயது இளையர் மீது குற்றச்சாட்டு

1 mins read
20d4c011-08f7-485c-baeb-46b693e21010
-

தமது தங்­கையை பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­த­தாக 19 வயது இளை­யர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழக மாண­வ­ரான அவர் மீது, பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­த­தாக இரு குற்­றச்­சாட்­டு­கள், உட­லு­றவு மூலம் பாலி­யல் துன்­பம் விளை­வித்­த­தாக இரு குற்­றச்­சாட்­டு­கள், பாலி­யல் பலாத்­கா­ரம் செய்ய முயன்­ற­தாக ஒரு குற்­றச்­சாட்டு, வேண்­டு­மென்றே காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக இரு குற்­றச்­சாட்­டு­கள் ஆகி­யன சுமத்­தப்­பட்டுள்­ளன.

2020 ஜன­வரி மாதம் 11 வய­தாக இருந்த தமது தங்­கையை அவர் இரு­முறை பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது. முன்­ன­தாக 2017ஆம் ஆண்டு அந்­தக் குற்­றத்­தைச் செய்ய அவர் முயன்­றுள்­ளார்.

தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அந்­தச் சிறு­மியை அந்த இளை­யர் இரு­முறை தாக்­கி­ய­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன. தற்­போது சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பரா­ம­ரிப்­பின்­கீழ் ­சி­றுமி உள்­ளார்.

அண்­ணன், தங்­கை­யின் பெற்­றோர் நேற்று நீதிமன்றத்திற்கு வந்­தி­ருந்­த­னர்.

$50,000 பிணை அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பதின்ம வயது இளை­யர் மீண்­டும் இம்­மா­தம் 23ஆம் தேதி நீதி­மன்­றம் வர­வேண்­டும்.

பாலி­யல் பலாத்­காரக் குற்­றம் ஒவ்­வொன்­றிற்­கும் 8 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை, குறைந்­த­பட்­சம் 12 பிரம்­ப­டி­கள் ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.

பாதிக்­கப்­பட்­ட­வர் சிறுமி என்­ப­தால் குற்­ற­வா­ளி­யைப் பற்­றிய விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.