உக்ரேனிலிருந்து மேலும் மூன்று சிங்கப்பூரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஆறு சிங்கப்பூரர்கள் உக்ரேனில் இருப்பதாக அவர் கூறினார்.
உக்ரேனில் ஒன்பது சிங்கப்பூரர்கள் இருப்பதாக அமைச்சர் மூன்று நாள்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, உக்ரேனுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து மனிதாபிமான உதவி வழங்கிவருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உக்ரேனில் நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தக் கோரி அறிக்கை ஒன்றை ஆசியான் அமைப்பு கூடியவிரைவில் வெளியிடும் என அவர் கூறினார்.


