மேலும் பல நகரங்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையை (விடிஎல்) சிங்கப்பூர் விரிவுபடுத்துகிறது.
கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்து மார்ச் 16ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையின்றி சிங்கப்பூருக்கு வரலாம்.
ஏற்கனவே, சென்னை, மும்பை, புதுடில்லி ஆகிய இந்திய நகர்களிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள தேவையின்றி பயணிகள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்தோனீசியாவின் பாலி தீவு, மலேசியாவின் பினாங்கு, ஆகிய நகர்களுக்கும் விடிஎல் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதோடு, வியட்நாம், கிரீஸ் ஆகிய நாடுகளுடன் விடிஎல் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கவுள்ளது.
இந்த விரிவாக்கத்தை சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரவு ஆணையம் இன்று அறிவித்தது.
மார்ச் 16ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கும் பினாங்குக்கும் இடையே ஒவ்வொரு நாளும் நான்கு விமானச் சேவைகள் இயங்கும்.
பாலி தீவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஒரு நாளைக்கு இரண்டு விமானச் சேவைகள் இருக்கும்.