உக்ரேனுக்கு $2 மி. நன்கொடை: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

உக்ரேனுக்கு $2 மி. நன்கொடை: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

1 mins read
f35daa4d-3329-455d-8ec6-fbb0b8a73877
உக்ரேனின் கார்கீவ் நகரத்தின் முக்கிய நகர மண்டபம் தாக்குதில் தகர்த்தப்பட்டது. (படம்: எஃபி) -

உக்ரேனில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் சுமார் $2 மில்லியன் நன்கொடையைத் திரட்டியுள்ளது. இந்தத் தொகை ஒரே வாரத்தில் திரட்டப்பட்டது.

பிப்ரவரி 25ஆம் தேதி உக்ரேனியர்களுக்கு உதவ நிதி திரட்டுத் திட்டத்தை சங்கம் தொடங்கியது. அதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் $100,000 வழங்கியது.

நன்கொடையாக வழங்கப்பட்ட பணம், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரப் பராமரிப்பு பயன்படுத்தப்படும் என்று சங்கம் தெரிவித்தது.

இதோடு, சிங்கப்பூரிலிருந்து அனுப்பப்பட்ட உதவி பொருள்கள் உக்ரேனைச் சென்றடைந்துள்ளன. உக்ரேனிய செஞ்சிலுவைச்சங்கமும், அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமும் பொருள்களை வினியோகித்து வருவதாக கூறப்பட்டது.

"முக்கியமாக சிறுவர்கள், முதியவர்கள், உடற்குறையுள்ளவர்கள் ஆகியோருக்கு உதவி வழங்குவது முக்கியக் குறிக்கோள்," என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளரும் தலைமை நிர்வாகியுமான திரு பெஞ்சமின் வில்லியம் தெரிவித்தார்.