பெரிய அளவில் நிகழ்ச்சிகள்: ஆயத்தமாகும் சுற்றுலாத் துறை

பெரிய அளவில் நிகழ்ச்சிகள்: ஆயத்தமாகும் சுற்றுலாத் துறை

1 mins read
6ba59d8f-8ef7-463a-8b2b-5a3108fbe9da
-

சுற்­றுலாத் துறை­யில் பெரிய அளவில் தொழில்­துறை, உல்­லாச நிகழ்ச்­சி­களை இந்த ஆண்­டில் அரங்­கேற்ற சிங்­கப்­பூர் ஆயத்­தமாகி வரு­கிறது.

வர்த்­தக, தொழில் அமைச்­சின் வரவு செல­வுத்­திட்ட விவா­தத்­தில் பேசிய துணை அமைச்­சர் லோ யென் லிங், இந்த ஆண்­டின் பிற்­பகு­தி­யில் மேலும் பல நிகழ்ச்­சிகள் சிங்­கப்­பூ­ரில் நடக்­கும் என்று தெரி­வித்­தார்.

உலக சுகாதார பாது­காப்பு மாநாடு 2022, ஃபார்முலா1 சிங்­கப்­பூர் கார் பந்­த­யம் முத­லா­னவை அவற்­றில் அடங்­கும்.

"உயர்­தர தொழில்­துறை, உல்­லாச நிகழ்ச்­சி­க­ளுக்­கான முன்­னணி இடம் என்ற சிங்­கப்­பூ­ரின் நிலையை நாம் தற்­காப்­போம்," என்று அமைச்­சர் கூறி­னார்.

சென்ற மாதம் இங்கு நான்கு நாள்கள் நடந்த சிங்­கப்­பூர் விமானக் கண்­காட்சி 2022 நிகழ்ச்­சிக்கு 13,000 வர்த்­தக பிர­மு­கர்­கள் வந்­த­தாக மதிப்­பி­டப்­ப­டு­கிறது. 39க்கும் மேற்­பட்ட நாடு­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 600 நிறு­வ­னங்­கள் அதில் பங்­கெ­டுத்­தன.

சிங்­கப்­பூர் பயணத்­துறைக் கழகம் அண்­மை­யில் 'சுற்­று­லாத்­துறை வாழ்க்­கைத்­தொ­ழில் மையம்' என்ற முன்­னோ­டித் திட்­டத்தை தொடங்­கி­யது. சுற்­றுலா துறை­யைச் சேர்ந்த நிறுவனங்­களுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் பயிற்சியளிப்­பது அதன் நோக்­கம்.

அனைத்­துலக பய­ணங்­கள் சூடுபி­டிக்­கும் நிலை­யில், கழ­கம் 'சிங்­கப்­பூர் மறு­கற்­பனை' என்ற தனது இயக்­கத்தை வேகப்­படுத்­தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சுற்­றுலாத் துறை நிறுவனங்­கள் கவர்ச்­சி­க­ர­மான திட்­டங்­களை உரு­வாக்க புதுப்­புது அனு­ப­வங்­களை ஏற்­ப­டுத்­தித்­தர கழ­கம் உதவும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.