ஜூலை முதல், அதிக கடற்கரைகள், பூங்காக்கள், தோட்டங்களில் புகைபிடிப்பதற்குத் தடை

2 mins read
327568b9-9462-4507-9def-373aba532114
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பதற்காக இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் புகை­பி­டித்­தல் தடை ஜூலை 1 முதல் நீட்­டிக்­கப்­படும். இதில் அனைத்து பொதுப் பூங்­காக்­கள், தோட்­டங்­கள், 10 பொழுது ­போக்கு கடற்­க­ரை­கள் மற்­றும் பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் துடிப்­பான, அழ­கான, தூய்­மை­யான இடங்­கள் உட்­பட பல பகுதிகளைக் கொண்டி ருக்கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

புகைப்­பி­டிப்­ப­தால் ஏற்­படும் தீய விளை­வு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரைப் பாது­காப்­ப­தற்­காக இந்­தத் தடை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் டாக்­டர் கோர் கூறி­னார்.

தற்­போது, சிங்­கப்­பூ­ரின் புகை­பி­டித்­தல் தடை­யா­னது தனி­யார் மற்­றும் பொது வீட­மைப்­புப் பேட்­டை­களில் உள்ள அக்­கம்­பக்க பூங்­காக்­கள், நீர்த்­தேக்­கங்­கள், இயற்கை வனப்­பூங்கா போன்ற இடங்­களை உள்­ள­டக்­கி­யது.

பாது­காப்­பான நடை­பா­தை­கள், பேருந்து நிறுத்­தத்­தி­லி­ருந்து 5 மீட்­டர் தொலை­வில் உள்ள பகு­தி­கள், வெற்­றுத் தளங்­கள் ஆகி­ய­வற்­றின் கீழும் புகை­பி­டித்­தல் அனு­ம­திக்­கப்­ப­டாது.

ஆனால், இந்­தத் தடை­ நீட்­டிப்­பால் தேசிய பூங்­காக் கழ­கத்­தால் நிர்­வ­கிக்­கப்­படும் மற்ற பொதுப் பூங்­காக்­கள், தோட்­டங்­கள் மற்­றும் பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் துடிப்­பான, அழ­கான, தூய்­மை­யான இடங்­கள் ஆகி­ய­வற்­றில் ஜூலை முதல் புகை­பி­டிப்­பது தடை­செய்­யப்­படும்.

லோரோங் ஹாலுஸ் பாலம் போன்ற ஆறு­க­ளுக்கு அரு­கி­லுள்ள கால்­வாய்­கள் போன்ற தளங்­கள் ஆகி­ய­வற்றை எடுத்­துக்­காட்­டு­க­ளா­கக் கூற­லாம்.

செங்­காங் மிதக்­கும் ஈர­நி­லம் போன்ற சதுப்பு நிலங்­கள் மற்­றும் பெரிய வடி­கால்­க­ளுக்கு அரு­கி­லுள்ள பகு­தி­களும் இந்­தத் தடை­யில் அடங்­கும். 10 கடற்­க­ரை­களில் புகை­பி­டிப்­ப­தற்­கும் தடை விதிக்­கப்­படும்.

சாங்கி, ஈஸ்ட் கோஸ்ட், வெஸ்ட் கோஸ்ட், செம்­ப­வாங், பாசிர் ரிஸ், பொங்­கோல் கடற்­கரைகள் ஆகி­ய­வற்­று­டன் கோனி தீவில் உள்ள கடற்­க­ரை­யும் இதில் அடங்­கும்.

சிலோசோ கடற்­கரை, தஞ்­சோங் கடற்­கரை, செந்­தோ­சா­வில் உள்ள பல­வான் கடற்­கரை ஆகி­ய­வற்­றி­லும் புகை­பி­டிக்க அனு­ம­திக்­கப்­படாது.

ஜூலை 1 ஆம் தேதி தடை அம­லுக்கு வரும்­போது, புகைப்­பிடிப்­ப­வர்­கள் பெரும்­பா­லும் புகை­பி­டிக்­கும் இடங்­கள், திறந்த பொது இடங்­க­ளான காலி நிலம், மூடப்­படாத நடை­பா­தை­கள், பல மாடி கார் நிறுத்­தும் இடங்­கள், மேல் தளத்­தில் உள்ள மூடப்­ப­டாத பகுதி­கள் போன்­ற­வற்­றில் மட்­டுமே புகை­பி­டிக்க முடி­யும்.

புகை­பி­டிக்­கும்­போது அங்­கி­ருந்து புகை வெளி­யேறாத வரை, தங்­கள் சொந்த வீடு­கள் அல்­லது கார்­கள் போன்ற தனிப்­பட்ட இடங்­களில் அவர்­கள் புகை­பி­டிக்­க­லாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.